சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

கிராண்ட் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபாரமான திறமையாலும், தளராத தன்னம்பிக்கையாலும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீரர் பிரக்ஞானந்தா அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.