மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு…

மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

திமுக வேட்பாளர்களான கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஸ்குமார், அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டது.

ஒரு வேட்பாளருக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு இல்லாத சுயேச்சை வேட்பாளர்கள் பத்மராஜன், அக்னி ஶ்ரீராமச்சந்திரன், மன்மதன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், வேல்முருகன் சோழகனார் ஆகிய 7 பேர் மனு நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்​ கொள்வதற்கான கடைசி நாளாக ஜூன் 3 அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.