மாநிலங்களவை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசனை வேட்பாளராக அறிவித்தது மக்கள் நீதி மய்யம்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனைத்தொடர்ந்து காலியாகும் இந்த ஆறு இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக போட்டியிடும் நான்கு இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதி மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.