அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்த சூழலில் அவர் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து சி.வி. சண்முகம் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து மேற்கண்ட காலி இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஜூன் 8 ஆகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 9 வரை நடைபெறும் நிலையில் மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூன் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.








