பீகாரில் கடந்த 2025-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தின் பங்கிபூர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ நிதின் நபின் மாநிலங்களைவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பங்கிபூர் தொகுதி காலியானது.
இதனையடுத்து அந்தத் தொகுதியில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டார். பாஜக சார்பில் நீரஜ் குமார் போட்டியிட்டார். மேலும் ஆர்ஜேடி சார்பில் ரேகா குப்தா போட்டியிட்டார்.
இந்த இடைத்தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. 32 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளில் பிரசாந்த் கிஷோர் ஆரம்பம் முதலே முன்னிலையில் தொடர்ந்தார். இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று முதலிடம்பிடித்தார். பாஜக வேட்பாளர் நிதின் நபின் 44,827 வாக்குகள் பெற்று 2-ஆம் இடமும், ஆர்ஜேடி வேட்பாளர் ரேகா குப்தா 14,273 வாக்குகள் பெற்று மூன்றாம் இடமும் பிடுத்தனர்.
இதனால் பிரசாந்த் கிஷோர் 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




