இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்: விடுதலைக்கு நடவடிக்கை கோரி சாலை மறியல்…!

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கை ராணுவம் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழ் நாட்டு மீனவர்களை கைது செய்து வருகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் மீண்டும் தமிழ் நாடு வர நீண்ட நாட்கள் ஆகிறது.

சமீபத்தில் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற தமிழ் நாட்டை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில அடைத்துள்ளது. இவர்கள் கடந்த 88 நாட்களாக இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் அவர்களது உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.