உதயநிதி கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம்!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயக்கடன் தள்ளுபடி தொடர்பான திமுக ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலிம் முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக தவெக அளித்த புகாரின் பேரில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அவரது வீட்டில் வைத்து தஞ்சை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இதனைத்தொடர்ந்து உதயநிதியின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவது திமுகவினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் உதயநிதியின் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் திமுக எம்.பிக்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.