முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் நியமனம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வரையிலும், அதிகபட்சமாக அவரது பணிக்கால ஓய்வான 65 வயது வரை  தேர்தல் ஆணைய பொறுப்பில் நீடிப்பார்.

தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுஷில் சந்திரா வரும் 14ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 19, 1960 இல் பிறந்த ராஜீவ்குமார், பி.எஸ்,சி, எல்.எல்.பி., பிஜிடிஎம் மற்றும் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.1984ம் ஆண்டு இந்திய ஆட்சி பணி அதிகாரியாக தேர்வானார். இவர் 36 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டவர். சுற்றுச்சூழல் மற்றும் காடுகள், மனித வளம், நிதி மற்றும் வங்கித் துறைகள் போன்ற மத்திய அமைச்சகங்களின் உயர் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

25-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் வரும் 15ம் தேதி பதவியேற்க உள்ளார். 62 வயதாகும் இவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு வகிப்பார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் பணிகளை தலைமையேற்று நடத்துவார்.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேகலாயா, நாகாலாந்து, கர்நாடாக உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் 2024ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கின்றது. அதிமுக்கியமான தேர்தலாக நாடாளுமன்ற தேர்தல் பார்க்கப்படுவதால் அதனை நடத்தக்கூடிய பொறுப்பை ராஜீவ்குமார் வகிக்கப்போகிறார்.  இதனால் மிக முக்கியமான காலகட்டத்தில்  இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பொறுப்பேற்கிறார்.

இதனிடையே  புதிதாக பொறுப்பேற்க இருக்கின்ற ராஜீவ்குமாரும் தற்போது  பணி ஓய்வு பெறும் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுடன் ஒரே சமயத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பணியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

Vandhana

விமானம் மோசமாக தரையிரங்கியதால் ஓடுபாதை விளக்குகள் சேதம்; விமானிகள் விளக்கமளிக்க டிஜிசிஐ உத்தரவு

Saravana

முழங்காலில் காயம்: ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் விலகல்

Ezhilarasan