2021ம் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது பெரும்பாலான தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றியைத் தன்வசமாக்கி உள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். இவர் சந்திக்கும் முதல் தேர்தலிலே இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்றக உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.