ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer- ஆளுநர் தமிழிசை புகழாரம்

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, Super Tax payer என்று வருமான வரி தின நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.  சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தினம்…

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, Super Tax payer என்று வருமான வரி தின நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டினார். 

சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தினம் (income tax day) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார். ரஜினிகாந்துக்கு பதில் அவரது மகள் சௌந்தர்யா விருதை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer என்று புகழாரம் சூட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளனர். அனைவரும் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். அரசுக்கு வரியை முறையாக செலுத்தாவிட்டால், நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம்.

வருமான வரி செலுத்த கடைசி நாள் இது என்று அறிவித்தாலும், மக்கள் கால நீட்டிப்பை எதிர்பார்க்கின்றனர். கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்த வருமானவரித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைய, பிரதமர் மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.