ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் வாரஹாத்தில்,யோகதா சத்சங்க ஆசிரமத்தில் மூவர்ணக் கொடி ஏந்தி சுதந்திர தினம் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வியாழக்கிழமை வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப்பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம் வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு ரஜினி சென்றார்.







