ரஜினி படத்தின் பெயர் வெளியானது

ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர், பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பீஸ்ட்…

ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது.

டாக்டர், பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில், ரஜினிகாந்த் – நெல்சன் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனாலும், நெல்சன் திரைப்படத்திற்கான போட்டோ ஷூட்டை ட்விட்டரில் கவர் புகைப்படமாக  வைத்ததன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்திற்கு ஜெயிலர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் எழுதி இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார். டைட்டில் போஸ்டரில் ரத்தம் ஒழுக ஒழுக கத்தி ஒன்று தலைகீழாக நிற்க அதற்கு கீழே ஜெயிலர் என்ற பெயர் உள்ளது.இத்திரைப்படத்தில் இளம் வயது ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதுபோலவே ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.