துணிவு பட கொண்டாட்டத்தில் உயிரிழந்த அஜித் ரசிகருக்கு ரஜினி மன்றம் சார்பில் நிதி உதவி

துணிவு திரைப்படம் பார்க்கச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த பரத் குமார் என்ற இளைஞரின் குடும்பத்தினரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர்…

துணிவு திரைப்படம் பார்க்கச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த பரத்
குமார் என்ற இளைஞரின் குடும்பத்தினரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான  துணிவு  திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி  நள்ளிரவு 1 மணிக்கு தமிழகம் முழுவதும் வெளியானது. சென்னையில் உள்ள பிரபர திரையரங்கான ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும்  ஒன்றாக வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் வெளியான துணிவு திரைபடத்தை பார்க்கச் சென்ற சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரத்குமார் என்ற இளைஞர் லாரியின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  ஜனவரி 11-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆறுதல் தெரிவித்து 25 ஆயிரம் ரூபாய்
நிதி உதவி வழங்கினர்.

பின்னர் இது குறித்து  ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ரமேஷ் கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது..

ரசிகன் என்ற இனத்தை சார்ந்த ஒருவர் தவறிவிட்டார். ரசிகர் என்ற இனம் பெரும்
உணர்ச்சிகரமான விஷயம்.  அஜித் நடிப்பில் உருவாகிய துணிவு திரைப்படத்தை
பார்க்க சென்ற ரசிகர் பரத்குமார் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. அவரது
குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் ரஜினி ரசிகர் மன்றம்
மூலம் செய்து கொடுப்போம் என்றார்.

தலைவர் ரஜினிகாந்த் நினைத்தததை அவர் எண்ணத்தால் நாங்கள் முன்னின்று நிதிஉதவி
செய்திருக்கிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று
அறிவித்தாலும் எங்கள் தலைவர் வழி நின்று மக்களுக்கு தொடர்ந்து உதவியை நாங்கள் செய்து கொண்டே இருப்போம் “  என ரமேஷ் கோவிந்தராஜ் கூறினார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.