’அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் குறித்து ராஜமௌலி, ஜேம்ஸ் கேமரூன் கலந்துரையாடல்…!

இயக்குநர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’  படm குறித்து கலந்துரையாடியுள்ளனர். 

ஹாலிவுட்டில் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூம் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் பண்டோராவின் மாயாஜால உலகத்தை காட்டியிருந்த அவதார் திரைப்படம் வசூலிலும் பெரும் சாதனை புரிந்தது.  இதை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு  வெளியான  இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் ; தி வே ஆஃப் வாட்டர் திரைப்படமும் முதல் பாகத்தை போலவே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவதாரின் மூன்றாம் பாகமான அவதார் ; ஃபயர் அண்ட் ஆஷ்’  திரைப்படத்தை ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்திய இயக்குநரான எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’  படத்தை பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில்  இயக்குநர் ராஜமௌலி,  ”காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ‘அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை பார்த்தபோது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப் போல குதூகலித்தேன். ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் ’அவதார்’ திரைப்படம் ஒரு வருடம் ஓடியது.  பெரிய திரை அனுபவங்களுக்கு ’அவதார்’ திரைப்படம் ஒரு மைல்கல்” என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சினிமா பார்வையைப் பாராட்டியதோடு இந்திய படங்களின் ஃபிலிம் செட்டை பார்வையிடும் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.