சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை என தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் காலை முதலே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட சில
இடங்களில் தலைமை செயலாளர் வெ இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது,
சென்னை பேசன் பிரிட்ஜ் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, அதிகாரிகளிடம் தொழிலாளர்களுக்கு உணவு கொடுங்கள். உணவு கொடுக்கிறீர்களா என்று கேட்டார். தொடர்ந்து, வேலையாட்கள் சோர்வு அடைந்து விடுவார்கள். அதிக நேரம் வேலை வாங்காமல் மாற்று முறையில் வேலையாட்களை நியமியுங்கள் என்றார். இங்கு மட்டுமின்றி எல்லா இடங்களிலும் இருக்கும் இயந்திரங்களை முறையாக உபயோகியுங்கள் என்று கூறினார்.
பின்னர், அதிகாரிகள் நடந்து முடிந்த வேலைகள் குறித்து விளக்கிய போது, எனக்கு வேண்டியது மழை பெய்தால் இந்த இடங்களில் மழை நீர் நிற்கக்கூடாது நிற்காது தானே எனக்கேட்டார். அதற்கு நிற்காத அளவுக்கு தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக திருவான்மியூர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்யை ஆய்வு செய்த
தலைமை செயலாளர் இறையன்பு, மழைநீர் வடிகால் பணிகள், தூர் வாரும் பணிகள்
மிகவும் தொய்வாக நடைபெற்று வருவதாகவும் நீங்கள் மனசு வைக்கவில்லை அதனால் இந்த பணிகள் விரைவாக முடிக்கப்படவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகர
ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள்,
மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.