முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடர் விடுமுறை எதிரொலி – இரண்டே நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த இரண்டு தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை அமைவதன் காரணமாக நடப்பாண்டில் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கம் போல விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணத்துடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுடைய அடுத்த தேர்வாக அரசு போக்குவரத்துக் கழகம் இருந்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகமும் தினசரி இயங்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு கடந்த இரண்டு தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் மொத்தமாக 5679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டது. இவ்விரண்டு நாட்களில் மொத்தமாக 3,12,345 பயணிகள் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பண்டிகை காலம் முடிந்து வெளியூரில் இருந்து சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அயோத்தியா மண்டபம்: “தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்”

Janani

இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

Janani

மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

Arivazhagan Chinnasamy