மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணிநேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணிநேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை பெய்யும் போத மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைகால் வடிநீர் பணிகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் பணிகளை அக்டோபர் 2ம் தேதி தலைமை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.