சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்றுவரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொளத்தூர் – திரு விக நகர் மண்டலம் 6
மழைநீர் வடிகால் பணியால் முற்றிலும் சேதம் அடைந்த 4 கிலோ மீட்டர் தார் சாலையில் கடந்த ஒன்றரை மாதமாக தெரு விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் தொகுதியிலும் மழைநீர் வடிகால் மெத்தனமாக தான் நடைபெறுகிறது என மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
கொளத்தூர் பகுதி எம்.என்.நகரில் மழை நீர் வடிகால் பணியின் காரணமாக நான்கு கிலோ மீட்டர் தார் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக மின்விளக்கு இல்லாத அவல நிலை நீடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நமது செய்தியாளர் நிஷாந்த் வழங்கிய கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம்.
மழைநீர் வடிகால் பணிகள் முற்றிலும் சேதம் அடைந்த தார் சாலையால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். முதலமைச்சர் தொகுதியிலும் மழை நீர் வடிகால் பணி மெத்தனமாக தான் நடைபெறுகிறது என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறோம் என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/news7tamil/status/1574275120364867584
போர்க்கால அடிப்படையில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சென்னையின் பிரதான வணிக பகுதியான தி.நகர் திருமலை பிள்ளை சாலையில் ஒரு புறம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்காமலும், சாலைக்கு மறுபுறம் நடைபெறும் பணிகள் முழுமையடைந்தும் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து நமது செய்தியாளர் விக்னேஷ் அளித்த கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம்.
சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக தான் பணிகள் தொடங்கியது.
சாலையின் இருபுறங்களில் பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மண்டலம் 6;-
பெருநகர் சென்னை புளியந்தோப்புக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் கால தாமதமாக நடைபெற்று வருவதால் பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் முறையாக இணைக்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் மாணவர்கள்
அடையாறு காமராஜர் அவென்யூ பகுதிகளில் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பள்ளி மாணவர்கள், மாற்று வழி இல்லாததால் பள்ளத்தை கடக்க வேண்டி உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த உமாவுடன் செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.
https://twitter.com/news7tamil/status/1574291473553424384
அடையாறு காமராஜர் அவென்யூ பகுதிகளில் 3 மாதங்களாக மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது. தெருக்கள் சந்திக்கும் இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது.
பள்ளத்தின் மீது போடப்பட்ட பலகையில் ஆபத்தான முறையில் கடக்க வேண்டி உள்ளது.பள்ளி குழந்தைகளும் ஆபத்தான பள்ளத்தை கடந்து செல்கிறார்கள். மழை நீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டதில் கழிவு நீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது.
500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் வரக்கூடிய சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







