கோயம்பேடு அருகே வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 3 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சண்முகநாதர் சத்தியம் தெருவில் குடியிருப்பில் கீழே கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை இந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
கோயம்பேடு தீணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் எரிந்து கொண்டிருந்த வாகனங்களின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என 4 வாகனங்கள் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறும் ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.








