ரயில்வே சுரப்பாதையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அம்மையநாயக்கனூர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில், மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இருசக்கர…

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அம்மையநாயக்கனூர் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில், மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தண்ணீரை கடக்க முடியாமல் பழுதாகி நிற்கின்றன. மேலும், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பாதி தண்ணீரில் மூழ்கிச் செல்லும் அவலம் உள்ளது.

இதன் விளைவாக வாகன ஓட்டிகள் 4 கிலோ மீட்டர் சுற்றி, பள்ளபட்டி வழியாக
சிலுக்குவார்பட்டியில் சாலையை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பலமுறை
பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் வாகன
ஓட்டிகள் புகாரளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
எனக் கூறப்படுகிறது .

மேலும், இது குறித்து சம்மந்தப் பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட
போது , ரயில்வே துறை பங்களிப்போடு கட்டப்பட்ட பாலம் என்பதால், அவர்களின்
ஒத்துழைப்போடு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என பதிலளிக்கின்றனர்.
எனவே, மக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடனடியாக இரயில்வே துறைக்கு
பரிந்துறை செய்து, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்
வழியுறுத்துகின்றனர்.

—கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.