தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை – 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும்  5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 5…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும்  5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு சென்னை மட்டும் புறநகர் பகுதிகளில்ல இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்தது. மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ( சனிக்கிழமை ) வரை அதிகபட்சமாக தேனி மாவட்டம், தேக்கடியில் 100 மி.மீ. மழை பதிவானது.  அதேபோல கன்னியாகுமரி மாவட்டம், களியல் 80மி.மீ மழையும் , திற்பரப்பு, பேச்சிப்பாறையில் தலா 60 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும்  லட்சதீவு பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை  சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கத் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.