#INDvsPAK : இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் -கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு!…

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.…

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்அவுட் ஆனது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா, 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 86 ரன்களும், ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்கமால் 53 ரன்களும் அடித்தனர்.. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி 8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அணியினர் ஒரு கட்டத்தில் 280 ரன்கள் சேர்ப்பார்கள் என்று தான் நினைத்ததாகவும், பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.