#RainAlert : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – எந்தெந்த மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. வடமேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று…

#RainAlert : Deep depression - Which states are likely to get rain?

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

வடமேற்கு மற்றும் அதையொட்டியுள்ள மத்திய வங்கக் கடலில் ஒடிசா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. மேலும் வடக்கு திசையில் நகா்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது தென்மேற்கு ஒட்டிய மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் மெதுவாக வடக்கு – வடமேற்கு திசையில் 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, கடந்த 6 மணி நேரத்தில் ஒடிசா பூரி கடற்கரைக்கு 70 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையிலும், கிழக்கு கோபால்பூர் பகுதிக்கு 140 கிலோ மீட்டர் தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு பாரதீப் பகுதிக்கு 120 கிலோமீட்டர் தொலைவிலும், சந்த்பலி பகுதிக்கு தெற்கு – தென்மேற்காக 170 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரப்பிரதேசம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு – வடகிழக்கு பகுதிக்கு 240 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்கம் திகா பகுதிக்கு தெற்கு – தென்மேற்கில் 290 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

அதன்பிறகு மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, ஒடிசா கடற்கரை பூரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசா, சண்டிகர் பகுதிகளுக்கு இடையே இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வாரம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், உட்புற கர்நாடகா பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா பகுதிகளில் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, கர்நாடகா பகுதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றும், நாளையும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா, பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.