தமிழகம் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் 2 அடிக்கு தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி

சென்னையை அடுத்த கிளம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகளால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மழைநீர் குளம் போல் தேங்கியது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நெடுஞ்சாலையை விட 2அடி உயரமாக இருப்பதால் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மழைநீர் 2 அடிக்கும் மேல் சாலையில் தேங்கி வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் இவ்வழியாக பயணிக்கும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.ஏற்கனவே பெருங்களத்தூர்-பரணூர் எட்டு வழிச் சாலை பணியின் காரணமாக சாலையின் ஓரம் பள்ளம் இருக்கிறது என தெரியாமல் வாகனங்கள் வலதுபுறமாகவே செல்வதால் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது,எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா பாதிப்பு.. பிரபல நடிகைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை!

EZHILARASAN D

மதுரை வைகையாற்றில் அடுத்தடுத்து அதிகரிக்கும் உயிரிழப்புகள் 

Dinesh A

டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம் பிடித்த தீபிகா படுகோனே!

Web Editor