உதகையில் மழையில் நனைந்தபடி பூங்காவை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனைந்தபடி, பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன்…

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனைந்தபடி, பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில
நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய இதமான கால நிலை நிலவி வந்தது. இந்நிலையில், காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய கால நிலை நிலவியது. தொடர்ந்து, பிற்பகல் முதல் சாரல் மழை பெய்தது.

சாரல் மழையின் காரணமாக குளிருடன் கூடிய இதமான கால நிலை நிலவியது. இதனால்  உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடியே இதமான கால நிலையை அனுபவித்தபடி பூங்காவை கண்டு ரசித்தனர்.  மேலும், குளுகுளு கால நிலை அனுபவித்து பொது மக்கள் மகிழ்ந்தனர்.

—ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.