ரயில் நிலையங்கள் தரவரிசை வெளியீடு … #ChennaiCentral எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடத்தில் உள்ளது. ரயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் தரவரிசை பட்டியலை 5 ஆண்டுகளுக்கு…

Railway Station Ranking Released … Know where #ChennaiCentral ranks?

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3வது இடத்தில் உள்ளது.

ரயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் தரவரிசை பட்டியலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் வருவாய் மற்றும் பயணிகளின் வருகை அடிப்படையில் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியல் முன்னதாக 2017-18ம் நிதியாண்டில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த நிதியாண்டில் (2023-24) ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், புதுடெல்லி ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு 3,337 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. தொடா்ந்து கொல்கத்தா ஹௌரா ரயில் நிலையம் ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி 2ம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் 3ம் இடத்திலும் உள்ளன.

மேலும், தெற்கு ரயில்வேயின் சென்னை எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்கள் முதல் பட்டியலில் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.