#ChessOlympiad2024 | 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்!

ஹங்கேரியில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஓபன்…

#ChessOlympiad2024 | The 45th Chess Olympiad starts today!

ஹங்கேரியில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது.

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஓபன் பிரிவில் 197 அணிகளும், மகளிர் பிரிவில் 184 அணிகளும் பங்கேற்கின்றன. ஓபன் பிரிவு அணியில் இந்தியா வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோர் ஆடுகின்றனர். அதேபோல், மகளிர் பிரிவு அணியில் இந்தியா தரப்பில் டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் உள்ளனர்.

மேலும், இவர்களைத் தவிர நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், அமெரிக்காவின் பாபியானோ காருனா, பிரான்ஸின் லெவோன் ஆரோனியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் இருக்கும் தடை காரணமாக, தொடர்ந்து 2வது முறையாக ரஷ்ய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்த விளையாட்டு போட்டி மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். ‘ஸ்விஸ்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள். கடந்த முறை இந்திய அணி இரு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.