நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து சிறப்பான விருந்து வைத்துள்ளார் விஜய்.
இப்படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் நெல்சன் விஜயுடன் நேர்காணல் செய்திருந்தார். அப்போது நடிகர் விஜய் நெல்சனுக்கு கொடுத்த முதல் விருந்து குறித்து நகைச்சுவையாக பகிர்ந்திருந்தார். இதுகுறித்து விஜயிடம், “நீங்க விருந்துன்னு சொன்னதும் ஆர்வமா வந்தோம். ஆன பேசி முடிச்சதும் மெதுவா கவர்ல இருந்து 100 ரூபாய் பிரியாணி எடுத்தீங்க பாருங்க. இதுக்கா காலைல இருந்து சாப்பிடாம வந்தோம்னு ஆயிடுச்சி” என்று நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.
இதற்கு பதிலளித்த விஜய், ‘அந்த மாதிரி சிம்பிளான பிரியாணி செம்ம டேஸ்டா இருக்கும்பா!. நம்ம ரசனையெல்லாம் இப்படிதான் இருக்கும்’ என்று கனிவாக பதிலளித்தார். ‘இருந்தாலும் விஜய் சார் விருந்துன்னா நல்லா தடபுடலா இருக்கும்னு நினைச்சோம்’ என்று கிண்டலடித்தார் நெல்சன். மேலும், ‘படம் முடிஞ்சதும் ட்ரிப் போனா எங்களையும் கூட்டின்னு போறீங்களா’ என்று ஜாலியாக அட்டி போட்டார் நெல்சன். ஆன் தி ஸ்பாட்டிலேயே‘அது மட்டும் முடியாதப்பே!’ என்பது போல் மறுத்தார் விஜய். இருந்தாலும் ஆறுதல் பரிசாக தன்னுடைய ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் ஒரு ரவுண்டு கூட்டிசென்றிருந்தார் விஜய்.
இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவுடன் இப்படத்திற்கான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளியது. படமும் வெளியானது… Rest is history (அதன் பிறகு நடந்தது வரலாறு). ஒருபக்கம் கே.ஜி.எஃப் திரைப்படம், பீஸ்ட் மோடில் பட்டையை கிளப்ப.. பீஸ்ட் படமும் ‘வலிமையான’ விமர்சனங்களுடன் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ‘நீங்க நம்பலனாலும் அதான் நெசம்’ என்பது போல அந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பகிரும் வகையில் விருந்து வைத்துள்ளார் விஜய். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நெல்சன் படத்திற்காக உழைத்த நடிகர்கள், கலைஞர்களுக்கும், இப்படத்தை மா…..பெரும் வெற்றிப்படமாக மாற்றிய மக்கள் என அனைவருக்கும் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
#Thalapathy ❤️ #Beast 💥@actorvijay @anirudhofficial @hegdepooja @sunpictures @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv @Pallavi_offl @AlwaysJani @Jagadishbliss pic.twitter.com/NfhHx9pY9n
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) April 25, 2022
இந்த வெற்றி விருந்தின் மூலம் பீஸ்ட் பார்ட்-2 உருவாவதற்கான ஹிண்டை படக்குழு கொடுத்திருப்பதாகவும் தகவல் பரவி வருகின்றது. லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திற்கான டீஸர், இதே போல ஒரு விருந்துக் காட்சிகளை கொண்டு தான் அமைந்திருந்தது. அந்த டீஸர் இணையத்தில் பட்டையை கிளப்பியது. ஆக நெல்சன் – விஜயின் அடுத்த படத்திற்கான hint-ஐயும் அதே போன்றதொரு சிறப்பான விருந்தைக் கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் இணையவாசிகள் கணித்து வருகின்றனர்.
மேலும், இரண்டாம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கணித்து வருகின்றனர். அதாவது, பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸில் தீவரவாதிகளின் தலைவரை, வீரராகவன் பாகிஸ்தானுக்குள்ளே புகுந்து தூக்குவார் அல்லவா..? அவரை விடுவிக்கக் கோரி மீண்டும் தீவிரவாதிகள் மால்-ஐ ஹைஜாக் செய்வார்களாம். மீண்டும் தீவிரவாதிகளின் தலைவர் விடுவிக்கப்படுவாராம். அவரை மீண்டும் பாகிஸ்தானுக்குள் புகுந்து வீர ராகவன் தூக்குவாராம். மீண்டும் ரிப்பீட்டாம். இந்த பார்முலாவைக் கொண்டு பார்ட்-3,4,5,6……என்று கூட பட்டையை கிளப்பலாம் என்றும் இணையவாசிகள் கோரி வருகின்றனர். அப்புறம் என்னங்க..ஆரம்பிக்க வேண்டியதுதானே!
– வேல் பிரசாந்த்







