நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஜயபாஸ்கரின் உதவியாளரான சரவணனின் சென்னை நந்தனம் வீடு, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான சாசன் டெவப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், சென்னை அண்ணாநகரில் உள்ள மற்றொரு உதவியாளரான முருகன் என்பவரது வீடு, சேலத்தில் உள்ள செல்வராஜ் என்ற மருத்துவரின் மருத்துவமனை என மொத்தம் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், இந்த இடங்களில் வீடு, அலுவலகம், பூட்டப்பட்டிருந்தது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பூட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு சீல் வைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று இன்று சீல் உடைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதே போல தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.