தமிழகத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு

தமிழகத்தில் இன்றுடன் ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. இன்று  இரவு முதல் கேரளா செல்கிறார். நாளை முதல் கேரளாவில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

தமிழகத்தில் இன்றுடன் ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு பெறுகிறது. இன்று  இரவு முதல் கேரளா செல்கிறார். நாளை முதல் கேரளாவில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உட்பட 9 பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். 20 பேர் 25லிருந்து 30 வயதுக்குள்ளும், 51 பேர் 31லிருந்து 40 வயதுக்குள்ளும், 38 பேர் 41லிருந்து 50 வயதுக்குள்ளும் உள்ளனர்.

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி எம்பி,
தேதி வரை 3 நாட்களில் 38கி.மீ / 3,570கி.மீ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முழகு மூடு, சாமியார் மடம், சிராயன்குழி, மார்த்தாண்டத்தில் உணவு இடைவேளை விடப்படும். மாலை மார்த்தாண்டம் முதல் குழித்துறை, களியக்காவிளை வழியாக பாறசாலையில் இன்று இரவு ஓய்வு எடுக்கறார். தமிழகத்தில் மேற்கொண்டுள்ள நடைபயணம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று இரவு கேரளா செல்லும் ராகுல் காந்தி நாளை முதல் கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய ஒற்றுமை நடைபயணம் எழுச்சியாகவும், சிறப்பாகவும் இருந்தது. பாஜக ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும். யாரும் நிம்மதையாக வாழ முடியவில்லை.

ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கே செல்லவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை, இந்திய ஒற்றுமை நடைபயண துவக்கமே விவேகானந்தர் நிலையத்தில் இருந்து தான் என தெரிவித்தார். சாதி இல்லை, மதம் இல்லை. மிகப்பெரிய ஆட்சி மாற்றம் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

42 ஆயிரத்திற்கு ராகுல் காந்தி எம்பி டீசர்ட் அணிந்திருக்கிறார் என்ற சர்ச்சைக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை, ராகுல்காந்தி டீ கடையில் டீ விற்றவரா? ஆயிரக்கணக்கான கோடி சொத்துகளை நாட்டிற்கு அர்ப்பணித்த குடும்பம் ராகுல்காந்தி குடும்பம். பாஜகவினர் மலிவான அரசியல் நடத்துகின்றனர். நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி யார் என்று தெரியும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.