தெலுங்கானாவில் 2 வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம்

தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 2வது நாள் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.…

தெலுங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 2வது நாள் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் இந்த பாத யாத்திரையை அவர் மேற்கொள்கிறார்.

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். 3 நாட்கள் கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ம் தேதி கேரளாவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ம் தேதி கர்நாடகாவில் தனது நடைபணத்தை மேற்கொண்டார்.

தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 2வது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இந்த மாநிலத்தில் 16 நாட்கள் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.