காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்திக்கு ட்விட்டர் வாயிலாக தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் “ராகுல் காந்திக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அரசியல் சாசன விழுமியங்கள் மீதான உங்களது தளராத அர்ப்பணிப்பும், துன்பங்களை எதிர்கொண்டாலும் உங்கள் அடங்காத தைரியமும் போற்றத்தக்கது. அதிகாரத்திடம் தொடர்ந்து உண்மையைப் பேசுவதோடு, கோடிக்கணக்கான இந்தியர்களின் குரலாக இருக்கட்டும். இவை உங்களின் கருணை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை பரப்புகிறது என்று கூறியுள்ளார்.
https://twitter.com/kharge/status/1670629567772471297?s=20
மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் ட்விட்டர் வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நம் முன் நமக்கு நீண்ட நெடும்பயணம் காத்திருக்கிறது. இருவரும் ஒன்றாக அணிவகுப்போம். என்று தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1670643448968515585?s=20
- பி.ஜேம்ஸ் லிசா







