உப்பள தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல்காந்தி!

3 நாள் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி பங்கேற்றார்.…

3 நாள் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தமிழகம் வந்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி பங்கேற்றார். தொடர்ந்து தமிழகத்தில் 2வது கட்டமாக ராகுல் காந்தி இன்று தூத்துக்குடியிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து ராகுல்காந்தி தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வ.உ.சி. கல்லூரிக்கு காரில் அழைத்து செல்லப்பட்ட ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்றார். வழக்கறிஞர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார். அப்போது, இந்தியாவில், பத்திரிக்கை, நீதித்துறை என அனைத்து துறைகளையும் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இதற்கான அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து, தூத்துக்குடி கோவங்காடு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, உப்பள தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.