கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு தெரியவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரொனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை என்றும், தற்போதைய நிலையில் ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை செயல்படுத்திவிட்டு, நாடு முழுவதும் பொது ஊரடங்கை அறிவிப்பதே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் செயலற்ற தன்மை பல அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கி வருவதாகவும் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: