சிறுமியை தோளில் சுமந்து சென்ற ராகுல் காந்தி – இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நெகிழ்ச்சி

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில், காலணியை தொலைத்த சிறுமியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல்…

இந்திய ஒற்றுமை நடைபயணத்தில், காலணியை தொலைத்த சிறுமியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் சென்று முடிவடைய உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து டெல்லியில் ராகுல் காந்தி இன்று நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது நடைபயணத்தில் கலந்து கொண்ட ஒரு சிறுமி, கூட்ட நெரிசலில் தனது காலணியை தொலைத்தார். இதையறிந்த ராகுல் காந்தி, அந்த சிறுமியை தனது தோள்மீது தூக்கிச் சுமந்து நடைபயணத்தை மேற்கொண்டார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.