ஐசிசி உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தின் மூலம் 97 ரன்கள் சேர்த்த ராகுல் தோனியின் சாதனையை முடியடித்துள்ளார்.
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 199 ரன்களுக்குள் சுருண்டது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்தியா தடுமாறியது.
அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி (85) மற்றும் கே.எல்.ராகுலின் (97) அசைக்க முடியாத ஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கே.எல்.ராகுல் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் சேர்த்தவர் பட்டியலில் தோனியின் சாதனையை அவர் முடியடித்துளளார். இதில் ராகுல் டிராவிட் முதலிடத்தில் உள்ளார்.
ராகுல் திராவிட் -145
கே.எல்.ராகுல் – 97
எம்.எஸ்.தோனி – 91







