நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அவரைச் சந்தித்துவிட்டு திரும்பிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து கொடுத்தார். பிறகு அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து கொண்ட அவர், பிறகு சென்னை திரும்பி னார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர், தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுக்கொண்டு சென்னை வந்தார். இதற்கிடையே, ’அண்ணாத்த’ படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிகாந்துக்காக திரையிடப்பட்டது. இதை ரஜினி குடும்பத்தினருடன் சென்று பார்த்தார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நேற்று திடீரென்று அனுமதிக்கப்பட்டார். இது சமூகவலைதளங்களில் நேற்று பரபரப்பானது. ‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். அவருக்கு சாதாரண மருத்துவ பரிசோதனை தான் என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவரை சந்தித்துவிட்டு வந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், அவர் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ரஜினிகாந்த் நன்றாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார். நான் நேரில் பார்த்தேன். ’அண்ணாத்தே’ பட வெளியீட்டுக்கு ரஜினி கண்டிப்பாக இருப்பார். அவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கி றது என்றார்.








