கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் முள்ளங்கி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் , போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் முள்ளங்கி
விளைச்சல் அதிகரிப்பு காரணமாக, விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதிக முள்ளங்கி விளைச்சல் காரணமாக, வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால், பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.
மேலும், இதனை அறிந்த பென்டரஹள்ளி கிராமத்தில் உள்ள திப்பனாங்குட்டை
ஏரியின் மீன் பிடி குத்தகைதாரர், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் உள்ள
விவசாயிகளை அணுகினார். முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி,
அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கினார்.
விவசாய நிலத்தில் வீணாக போகும் முள்ளங்கிகளை, வேறு வழியின்றி கிலோ ஒரு
ரூபாய்க்கு விவசாயிகள் தருகின்றனர்.
—கு. பாலமுருகன்







