அமெரிக்க பந்து வீச்சாளர் குயிக் கைல் பிலிப் பந்துவீசும் முறை குறித்து உரிய விளக்கம் அளிக்கும் வரை அவரது இடைக்கால தடை தொடரும் என பிசிசி தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் விளையாடி வரும் கைல் பிலிப் ஐசிசி’யின் விதிகளுக்கு புறம்பான ஆக்ஷனில் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான சுனில் நரைன் பந்து வீச்சு மீது சந்தேகம் எழுந்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18-வது ஓவரை வீசிய நரைன் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். அவரது இந்த பந்து வீச்சே ஆட்டத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுனில் நரைன் பந்தை எறிவது போல சந்தேகம் உள்ளதாக கள நடுவர் புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி அவரது பந்து வீச்சை ஐபிஎல் கமிட்டி ஆய்வு செய்தது, அப்போது முழங்கை ஐபிஎல் விதிமுறையை தாண்டி அதிக டிகிரியாக வளைந்தது என்பதே இதற்கு காரணமாக அமைந்தது. மீண்டும் ஒருமுறை சுனில் நரைன் பந்து வீச்சில் சந்தேகம் எழுந்தால், அவர் தொடர்ந்து பந்து வீச தடை விதிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது.
தற்போது இதேபோன்று காரணங்களால் கைல் பிலிப் பந்துவீசும் ஆக்ஷனை பரிசோதித்த ஐசிசி வல்லுநர்கள், அவர் தனது ஆக்ஷனை மாற்றினாலோ அல்லது ஏற்கனவே பந்துவீசப்படும் ஆக்ஷன் குறித்த தெளிவான விளக்கம் கொடுத்தால் மட்டுமே, சோதனைக்கு பிறகு அனுமதி வழங்கப்படும் என ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.
அதுவரை கைல் பிலிப் பந்துவீசுவதற்கான இடைக்காலத் தடை தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.