பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சந்தைகள்: ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மற்றும் வேப்பூர் சந்தைகளில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். வரும் 29ஆம் தேதி…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மற்றும் வேப்பூர் சந்தைகளில் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை
நடைபெறுவது வழக்கம். வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை
கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்றைய வார சந்தையில், சேப்பாக்கம், நல்லூர், அடரி, பெரியநெசலூர், காட்டுமைலூர், சிறுப்பாக்கம் உள்ளிட்ட
நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் வெள்ளாடு, கொடி ஆடு, செம்மறி ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர்.

சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், சென்னை, மதுரை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் நள்ளிரவு முதலே ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

ஒரு ஆடு ஆடு ரூ.6000 முதல் ரூ.35,000 வரை விற்பனையானது. சுமார் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆட்டுச்சந்தையிலும் விற்பனை களைகட்டியது.
பெரும்பாலும் மலைப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள இயற்கையான தாவரங்களை மேய்ச்சலுக்கு உட்படுத்தி வளர்க்கப்படுவதால் இங்கு விற்பனைக்கு வரும் ஆடுகளுக்கு கிராக்கி உண்டு.

வெள்ளாடுகள் ஜோடி ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலும், குறும்பாடுகள் ஜோடி ரூ.20,000 முதல் ரூ.35,000 வரையிலும், செம்மரி ஆடுகள் ஜோடி ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. இதனை ஏராளமான வியாபரிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் வாங்கிச்சென்றனர். இங்கு சுமார் ரூ.6 கோடி அளவுக்கு 10,000 ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.