ராமநாதபுரம் நூலகத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு இரண்டு நாட்கள் ராமநாதபுரம்
மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது. அதில் பல்வேறு இடங்களுக்கு சென்ற சட்டமன்ற பேரவை
குழு நிறைவாக ராமநாதபுரம் மாவட்ட நூலகத்திற்கு சென்றது. அங்கு மிகவும் பழமையான நூலகத்தை ஆய்வு செய்தது.
அப்போது அங்கு போட்டி தேர்வுக்கு புத்தங்கள் படிக்க வந்த மாணவர்கள் மற்றும்
செய்தித்தாள் படிக்க வந்த முதியோர்கள் ஆகியோர்களிடம் நூலகத்தின் பயன்கள் பற்றி கேட்டறிந்தனர்.
அதன் பின்பு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பாதுகாப்பு இல்லாமல் தரையில் போட்டிருந்தது கண்ட மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் அதிர்ச்சி அடைந்தார். பின் எதற்காக பராமரிக்காமல் தரையில் புத்தகங்களை போட்டு உள்ளீர்கள் என்று நூலக பணியாளர்களை கண்டித்தார். அதற்கு போதுமான இட வசதி இல்லை என தெரிவித்ததை அடுத்து உடனடியாக இட வசதி செய்து தர மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ம. ஶ்ரீ மரகதம்








