“வினாத்தாள் கசிவு விவகாரம்: உயர்மட்ட பணிக்குழு அமைப்பு!” – பிரதமர் நரேந்திர மோடி

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் நடத்தியதை அடுத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நெற்று ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து பிரகலாத் ஜோஷி இன்று புதிதாக கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “இந்திய அரசு நமது தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஏற்கெனவே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம், மேலும் கடுமையான விதிமுறைகள் கொண்ட புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், எதிர்காலத்திற்கும் நாம் திட்டமிட வேண்டும். அதனால் தேர்வு முறையை நம்பகமானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றும் நோக்கில், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்தப் பணிக்குழு விரிவான தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும், மேலும் அதன் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளுக்கு முழுமையான நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


#NandanNilekani
| #PMModi | #TamilNews | #LatestNews

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.