முக்கியச் செய்திகள் இந்தியா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா இன்னும் உலகை தன் கட்டுக்குள் வைத்துள்ளது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரஹ்லாத் படேல் உட்பட 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டதொடரின் நாட்கள் குறைக்கப்பட்டது. தற்போது கொரோனாவுக்கான தடுப்புசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளது. .

இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திகுறிப்பில், “மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடந்த 19ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்: பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

Gayathri Venkatesan

மர்மமான முறையில் வாலிபர் மரணம்!

Niruban Chakkaaravarthi

தன்னலமற்ற சேவை: முன்களப் பணியாளர்களை பாராட்டிய பிரதமர் மோடி!

Halley karthi