டெல்லியில் அதிகரித்த காற்று மாசு

தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில்…

தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளதாக காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு தீபாவளிக்கும் மிகப்பெரிய கவலையாக காற்று மாசு பிரச்னை மேலெழுந்து வருகிறது.

தேசிய தலைநகர் டெல்லியில் இன்று பிற்பகல் நிலவரப்படி காற்று மாசு AQI 339 என்ற அளவில் அதிகரித்துள்ளது என காற்று தர கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசு அளவு 341ஆக பதிவாகியுள்ளது. காற்று மாசு சராசரியாக 303 என்கிற அளவில் பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசு பூஜ்ஜியத்திற்கும் AQI 50க்கும் இடையில் இருந்தால் ‘நல்லது’, 51 மற்றும் 100 ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ‘மோசம்’, 301 மற்றும் 400 ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 மற்றும் 500 ‘கடுமையானது’ எனக் கருதப்படுகிறது.

டெல்லி முழுவதும் தீபாவளியன்று பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டவிரோதமாக பல இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெறுவாதாக தனியார் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.