இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43, 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாகப் பரவியது. தொற்றுக்காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தன. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டதை அடுத்து, தற்போது தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்பும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 41,678 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை 3,06,63,147 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 3,99,436 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுப் பாதிப்பால் ஒரே நாளில் 640 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,22,022 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 44,61,56,659 போருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.








