“பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு…” – டிடிவி தினகரன் ஓபன் டாக்!

பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிடுவொம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலைக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “வாளுக்கு வேலி அம்பலம் சிறந்த சுதந்திர போராட்ட வீரர். பாகனேரி நாட்டை ஆண்ட மன்னன். மருது பாண்டியர் மன்னர்களோடு துணை நின்று போரிட்டு வீரமரமடைந்தவர். அகில இந்திய அளவில் தலைமை தாங்குவது பாஜக. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் சந்திக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைந்திருக்கிறது.

என் டி ஏ கூட்டணி தமிழ்நாட்டில் பலமடைந்து வருவதில் மகிழ்ச்சி. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அந்த கட்சி எல்லாம் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும். என் டி ஏ கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதற்கு நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது உறுதி.

அதன் காரணமாக திமுக அமைச்சர் உட்பட அனைவரும் பயத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜக அதிமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.ஆனால், இவர்கள் 1999 , 2004 வரைக்கும் கூட்டணி இருந்தவர்கள் தான். பயத்தில் திமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்குள் உள்ள பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி
வெற்றிக்கு முழுதும் பாடுபடுவோம்”

இவ்வாறு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.