புதுச்சேரியில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக லால்சலாம் திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லால்சலாம் படப்பிடிப்பில் பங்கேற்க வந்த ரஜினி காந்துடன் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது மகன்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டு, அவரது சமூக வலைதளத்தில் படத்தை பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆன்மீகமும் அன்பும் கலந்த வசீகரப் புன்னகையுடன் அருகில் செல்வோருக்கு ஆத்மார்த்தமாய் நேர்மறை சக்தி உணர்வை ஊட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—ரூபி.காமராஜ்