அதிமுகவிற்குள் உள்ள சின்னச்சின்ன பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு, 2021 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும், என கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக, அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார் என கூறினார். மேலும், ஜெயலலிதா காட்டிய வழியை பின்தொடர்ந்தால், நம்மை வெல்ல யாரும் இல்லை என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்