மத்திய பட்ஜெட்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை!

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய பட்ஜெட்டை,…

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பாக, அனைத்து மாநில நிதியமைச்சர்களோடு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டு கருத்துகளை கேட்டறிந்தார். தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலமாக கலந்து கொண்டார். அப்போது தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையிலும், பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply