திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஷ்வர், சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் தலம் என கருதப்படும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 10 நாட்கள் நடைபெறும் இவ் விழாவில் 9வது நாளான திங்கட்கிழமை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. இதில் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் , சவுந்திர நாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் சிவ சிவ என கோஷம் எழுப்பிய படி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
—கோ. சிவசங்கரன்







